வலிநிவாரணிகள் தலைவலிஇ முதுகுவலிஇ மூட்டுவலி போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும் இவை மூட்டுவலிஇ முதுகுவலி போன்றவற்றிற்கு குறிப்பிட்ட சில காலம் வரை பயன்படுத்துதல் ஏற்புடையது. வலி நிவாரணிகளை தொடர்ந்தும் பாவிப்பதன் மூலம் உடலுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். வலியானது எமது உடலின் இழையங்களின் சிதைவின் போது உருவாக்கப்படும் இரசாயன பொருட்களினால் நரம்புகள் தூண்டப்படும்போது ஏற்படும் ஓர் உணர்வு ஆகும்.இது ஒரு நோயல்ல.
இதற்கான தோற்றுவாயை இனங்கானதவரை வலி நிவாரணிகளை தொடர்ந்து பாவிப்பது அருவருக்கத்தக்க விடயமாகும். பொதுவாக முதுகுவலி மார்புபுற்றுநோய் தொடக்கம் முன்னிற்கும் சுரப்பிப்புற்றுநோய் மற்றும் ஏனைய அநேக புற்றுநோய்களும் ஏற்படலாம்.
வயிற்றுவலியானது குடற்புண் குடல்வளரியில் ஏற்படும் அழற்சி மற்றும் சூலகக்கட்டிகள் குடல் முறுக்கமடைதல்இ சிறுநீர்சணனித் தொகுதிசார் நோய்களிலும் ஏற்படலாம். இவ்வாறான நிகழ்வுகளில் வலியை குணப்படுத்துவதை விட வலியின் தோற்றுவாயை விரைவில் இனங்காணவேண்டிய தேவை உள்ளது. வயிற்றுவலியால் பாதிப்புற்றிருக்கும் போது வலி நிவாரணிகளை பயன்படுத்தும் வேளைகளில் வலியின் தன்மை முற்றுமுழுதாக மறைக்கப்படுகிறது.
வயிற்றுவலியை ஏற்படுத்தும் நோய் மூலத்தை இனங்காணும்போது வலியின் தொடர்ச்சித்தன்மை வலி உணரப்படும் விதம் வலி நிலைக்கும் கால அளவு வலியின் பரவுகைத்தன்மை வலியை அதிகரிக்கும் காரணிகள் வலியுடன் சேர்நத சில குணங்குறிகள் என்பவற்றைக் கொண்டு வலியின் தோற்றுவாய்க்குரிய உள் உறுப்பை இனங்கானமுடியும்.
இதன்மூலம் வயிற்றுவலியை ஏற்படுத்தும் உயிராபத்தை விளைவிக்க்கூடிய நோய் நிலைகள் ஏதும் இருப்பினும் உடனடியாக இனங்கண்டுகொள்ளலாம். அத்துடன் விசேட கதிர்ப்பட சோதனைகள் கழியொலி நுண்ணொலி (ருடவசய ளுழரனெ ளுஉயnநெச) போன்றவற்றின் துணையுடன் மோசமான உயிராபத்தை விளைவிக்கக் கூடிய வயிற்றுவலியை உருவாக்கும் நோய் நிலைகளை காலதாமதமின்றி இனஙகண்டு ஏற்ற சிகிச்சைகள் வழங்கமுடியும்; ;
வலி நிவாரணிகளால் வயிற்றுப்புண் ஏற்பட்டு தொடர்ந்து வலுப்பெறுவதால் குடலில் அல்லது இரப்பையில் துளைகள் ஏற்பட்டு உயிராபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களும் உருவாகின்றது..
No comments:
Post a Comment