Pages

Sunday, January 2, 2011

ஊக்க மருந்தினால் உருக்குலைக்கப்படும் வாழ்வு

ஊக்க மருந்து என்பவை போதை வஸ்துகள். போதைப்பொருட்கள் பவுடர், குடு, தூள்
என்று பல பெயர்களிலும் அழைக்கப்படும் போதை தரும் பொருட்களாகும். இவற்றில்
சொக்கையின் கெரோயின், மயூவானா அம்பீற்றமின் என பல வகைகள் உள்ளன.
இவற்றின் பயன்பாட்டால் மூளையின் தொழற்பாட்டில் மாற்றமேற்படுகின்றது. இதனூடு
நடத்தை மாற்றங்களும் சிந்தனை தீர்மானங்கள் ஞாபகம் என்பனவும் மாற்றமுறுகின்றன.
இவற்றின் பயன்பாட்டின் போது சிலவகை போதைப்பொருட்களினால் னுழியஅiநெஇ
ளுநசழவழnin என்னும் மனித மூளையின் சுரப்புக்கள் இவற்றின் சுரக்கும் அளவில்
மாற்றம் ஏற்படுகின்றது. இதனால் ஏற்படும் விளைவாக hயடடரஉiயெவழைn அதாவது
எளிமையாக கூறின் சித்தப்பிரமை போன்ற ஒரு தன்மை எனலாம். இதனூடு நடத்தை
மாற்றங்கள் பலவும் நிகழ்கின்றன. இது இவ்வாறு இருக்க

போதைப்பாவனையாளர்கள் பசியின்மை மற்றும் உணவை எடுக்கதவறுதல் போன்றவற்றுடன்
தமது உடற்சுத்தம் போன்ற விடயங்களிலும் தவறும் தன்மை ஏற்படுகின்றது. இவற்றின்
வழியே பொறுப்புகளில் இருந்து விலகுகின்ற தன்மை காணப்படும்.

போதைப்பாவனை ஏற்படும் போது விடுபடுவோம் என்ற எண்ணம் காணப்படும் அது எல்லாம்
எமது மனத்தின் கட்டுப்பாடு என்றே கருதிக் கொள்வார்கள் எனினும் போதைப் பொருள்
பாவனையில்காலஒட’டத்தில் ழூள்கி விடுவதே வழமை இதற்கு போதைப் பொருட்கட்டு சில
இயல்புகள் உள்ளன. அதாவது னுசரப வழடநசயnஉநஇ னுசரப றiவானசயறயட ளுலஅpவழஅ
இவற்றினால் போதைப்பாவனையில் இருந்து விடுபட முடியாது போகின்றது.

drug tolerance என்னும் போது ஆரம்பத்தில் சிறிய அளவு போதைப்பொருளால்
உண்டாகும் விளைவை அனுபவிக்க முடிகின்றது கால ஒட்டத்தில் அதேயளவான விளைவை
அனுபவிக்க கூடுதல் அளவில் போதைப்பொருள் தேவைப்படுகின்ற தன்மையாகும்.
இதுபோதைப்பொருளின் சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படும்.

drug withdrawal என்னும் போது போதைப்பொருளை கைவிட முடியாத நிலை அதாவது
தொடர்ந்து போதைப்பொருட்பாவனையால் குருதியில் போதைப்பொருள் செறிந்து
காணப்படும் இதன் அளவு குறைவடையும் போது சில பாதிப்பான குனம்குறிகள் தென்படும்.
இதில் வாந்தி தொடக்கம் மாறுபட்ட நடத்தை இயல்புகள் வரை காணப்படலாம்
இவ்வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தும் எண்ணமும் காணப்படும் இதனால் இவர்கள்
கைவிட்ட போதைப்பொருளை மீண்டும் தொடர வேண்டிய நிலைக்கு உட்படுவர். இதனால்
இவர்கள் நினைப்பது போன்று நிறுத்திவிட முடியாது என்ற எண்ணம் உருவாகும்
தொடர்ந்தும் படுகுழியில் நகர்ந்த வண்ணமே காணப்படுவர். இப்போதை பாவனையின்
போது எச்சரிக்கை அறிகுறிகளாக கண்ணில் சிவப்பு பொருட்கள் காணப்படும்
நித்திரை, குழப்பம், உடற்சுத்தம் மாறுபடல், துர்நாற்றம், உடலில்,
மூச்சுக்காற்றில் உருவாதல். நடுக்கம் போன்றவை இவற்றைவிட வேலையின்
திறன்குறைதல், பணப்பற்றாக்குறை ஏற்படல் இதனால் திருடுதல் சந்தேகக்குணம்
ஏற்படல், தீமை ஏற்படுத்தல் எண்ணங்கள் போன்றனவும் காணப்படும்.

இவற்றைவிட போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டால் இவற்றுக்கு சுவாசப்
பொறிமுறையின் திறனான செயற்பாட்டை குறைக்கும் இயல்பு காணப்படுகின்றது. இதனால்
மிகைப் போதையூட்டப்படும் போது மூச்சுவிடுதல் அதாவது சுவாசப்பொறிமுறை
பாதிப்புறும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இவை இவ்வாறிருக்க இவர்கட்கு நோய்த்தொற்று ஏற்படும் வழியாக ஊசிகள் குற்றும்
போது ஏற்படும் இரத்தக் கலப்பு காணப்படுகின்றது. இவர்களைப் பொறுத்தவரையில் ஊசி
மூலம் ஏற்றிக் கொள்வது பற்றியே எண்ணம் காணப்படும் இதன்போது குருதிக்கலப்பு
ஏற்பட்டு மற்ற நபரின் குருதியில் காணப்பட கூடிய hiv மற்றும் hepatitis தொற்று
உறலாம் என்பது பற்றி எண்ணம் சிந்தனை சிறிதும் காணப்படாது இதனால் இவர்கள்
பெரிதும் hiv தொற்றுக்கு ஆளாவது வழமையாகிவிட்டது.

இவ்வாறு பட்ட நிலையை இவர்கள் உணரும் நிலையில் போதை மருந்துப்பாவனையில் உள்ள
போது காணப்பட மாட்டார்கள் போதைப்பாவனையானது தடைசெய்யப்பட்டது எனினும்
கண்டும் காணாமல் இவை விற்பனையாவது சகயம் ஆகிவிட்டன.


இவற்றால் ஏற்படும் பாதிப்பு நீண்டகால விளைவுகளை உணராது இளைஞர்கள் இதனுள்
மூழ்குவதால் மீண்டு எழ முடியாது குற்ற செயல்புரிவோராகவும் சமுதாய சீரமிவுகள்
புரிவோராயும் பாதை மாற்றி கனவுகள் சுமந்த இளமைப்பருவம் சீரழிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator