Pages

Sunday, January 2, 2011

அழகான உடலைப் பெற ஆரோக்கியத்தை இழக்கலாமா?

பிள்ளைப் பருவத்திலிருந்து யௌவனப் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு
யுவதிக்கும் கற்பனைகள் சிறகடிக்கும், கனவுகள் பூப்பூக்கும் எண்ணங்கள் கைகால்
முளைத்த காற்றாய் காற்றில் பறக்கும். இதன் வெளிப்பாடாய் அழகிய மெலிந்த உடல்
வாகைப் பெறவேண்டும் என்ற ஆசை மேலிடும்.
அதற்காக:-
 தீவிர உணவுக் கட்டுப்பாடு - severe dieting
 தற்தூண்டல் வாந்தி - self induce vomiting
 அதீத உடற்பயிற்சி - excessive exercise
போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவார்கள். இதன் மூலம் உடல் மெலிவதும் அழகான
உடல்வாகு ஏற்படுவதும் உறுதி. எனினும், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது மேலும்
உறுதி.

இவ்வாறான நடவடிக்கைகளினால் பல்வேறு தீய விளைவுகள் ஏற்படும்.
 மாதவிடாய் நிறுத்தம் - Amenorrhea மனத்தாழ்வு - Low Mood
 பாலியல் நாட்டம் இன்மை - Lack of sexual Interest
 மலச்சிக்கல் - Constipation \
 தாழ்குருதி அமுக்கம் - Low Blood Pressure
கனியுப்பு சமனிலையின்மையால்
 சந்தம் தவறிய இதயத் துடிப்பு - Cardiac Arrhythmia
 சிறுநீரக செயற்றிறன் குன்றல் - Renal impairment
 வலிப்பு - Epileptic Fits

போன்றவை ஏற்படும் அபாயம் உண்டு.

தற்போது உயர்தர் வகுப்பு, பல்கலைக்கழக மாணவிகள் தாங்கள் அழகிய மெலிந்த
உடல்வாகைப் பெறவிளைவது நம் நாட்டில் காணக்கூடியதாக உள்ளது.சில யுவதிகள் தாங்கள்
அழகாக வரவேண்டும் என்ற அதீத ஆசையினால் உள்ளெடுக்கும் உணவின் அளவைக்
குறைகின்றார்கள்.

இறுதியில் சில உணவுகளைத் தவிர ஏனைய எல்லா உணவுகளையும் தவிர்க்கிறார்கள்.
இதனால் (கபச்சுரப்பி) மூளையின் தொழிற்பாடு பாதிக்கப்படுகிறது. அத்துடன்,
ஓமோன்களின் செயற்பாடும் தடைப்படுகிறது. இத்தகைய செயற்பாட்டால் மாதவிடாய்
நிறுத்தம், மனத்தாழ்வு மற்றும் பாலியல் நாட்டமின்மை போன்றன ஏற்படுகிறது.

அத்துடன், உடல் மெலிந்து அழகு பெறவேண்டும் என்று பேதி மருந்தைப் பாவிப்பது
சிலரிடத்தில் பழக்கத்தில் உள்ளது. இவற்றின் நீண்ட கால பாவணையும்
மலச்சிக்கலை உணடடு பண்ணுகிறது.

இவற்றை விட உணவு ஒதுக்கத்தினால் நார்த்த தன்மையான உணவுகள் போன்றனவும்
தவிர்க்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்பட வழி வகுக்கிறது. இவற்றுடன் உணவு ஒதுக்கத்தை
மேற்கொள்வதுடன் மாதவிடாய் போதான குருதி இழப்பினால் குருதிச்சோகை போன்ற
நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.

பொதுவாக அதீத உடற்பயிற்சியாலும் உணவு ஒதுக்கத்தாலும் (கொழுப்பு) உடலிலுள்ள
கொழுபு;பு சேமிப்பு குறைவடைகிறது. இதனால் குளிர் உணர்தல் அதிகரிக்கிறது.

அத்துடன், சில பெண்கள் தமது காலை உணவை உட்கொள்ளாது விடுத்து (skipping meal)
போன்ற போசனத் தவிர்ப்பு நடவடிக்கையினால் (ulcer) குடல் உபாதை ஏற்பட
வாய்ப்பு ஏற்படுகிறது. காலை உணவை விடுப்பதுடன் மட்டுமன்றி வெறும் வயிற்றில்
கோப்பி, தேனீர் போன்றவற்றை அருந்துவது மேலும் குடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பை
அதிகரிக்கிறது.

தன்தூண்டல் வாந்தி

இது சிலரிடம் பழக்கத்தில் உள்ள ஒன்றாகும். உணவு உண்ட பின் சிலர் தமது
கைகளைப் பயன்படுத்தி வாந்தி எடுக்கத் தூண்டும் செயற்பாடாகும். இதனால் வாந்தி
ஏற்படும். இதன் போது இரப்பையிலுள்ள அமிலமும் வாய்வழியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் பற்கள் பாதிப்புறும். அத்துடன், அமிலச் சமநிலை, கனியுப்பு சமநிலை என்பன
பாதிப்புறுகிறது. இதன் விளைவாக இதயத் முடிப்பின் சந்தம் தவறுகிறது. அத்துடன்,
சிறுநீரகப் பாதிப்புகள், வலிப்பு என்பன ஏற்பட ஏதுவாகிறது.

மெலிந்த உடல் அழகானதுதான். அதறகாக நோயுடன் கூடிய மெலிவை வருந்தி அழைத்து
நமக்கு நாமே தீமையை ஏற்படுத்தலாமா?

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator