Pages

Sunday, January 2, 2011

இளவயதுக் கர்ப்பம்

ரம்மியமான இளமை பருவம். இது@ வண்ணாத்துப்பூச்சியின் சிறகின் கீழ் வாரமெல்லாம் வசித்திடக் கேட்கும். மெல்லிய காற்றின் சங்கீதம் காதுக்குள் மெல்லிசையாய் ஒலித்திடக் கேட்கும், இதயச் சிறகை உரக்க விரித்து காதல் வானில் இதமாயப் பறக்கக் கேட்கும். சிறகசைத்து காற்றில்.. பூமலரும். பூ மலர.. வண்டின் வருகை கண்டு பூ மெல்ல நகும். வண்டு தேனை உண்டு பூவை விட்டு மெல்ல நகரும். வாடிய பூ சமூகத்தின் கரடுமுரடான தரையில் பட்டு கண்ணாடிப் பூவாய் சில்லென்று சிதறிப் போகும்.

பொதுவாக யௌவனப் பருவமானது 13-19 வயதுக்குட்பட்டது. இதனை ஆங்கிலத்தில் வுநநயெபந என்று அழைப்பர். இந்தப் பருவத்தில் பெரிதும் உளரீதியான, உடல்ரீதியான முதிர்ச்சியைப் பெண்கள் கொண்டிருப்பதில்லை. இதனால் இந்தப் பருவத்தில் இவர்கள் தாயாகும்போது அதிகமான அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அனேகமாக இவர்கள் தாயாவதுகூட ஒரு திட்டமிட்ட செயற்பாடாக அமையாது. தவறுதலான செயலாகவே அமைந்ததுவிடுகிறது. அத்துடன், இவர்கள் தங்கி வாழ்பவர்களாகவும், கல்வியைத் தொடர்பவர்களாகவும் மற்றும் சமூகத்தின்கூர்மையான பார்வைக்குள் தவறாது சிக்கிக் கொள்பவர்களாகவும் அமைகின்றனர். இவர்கள் உடல் ரீதியாகப் பெரிதும் முதிர்ச்சியடைந்திருப்பதில்லை.

இவர்களின் கருப்பை வளர்ச்சி, இடுப்பு என்பனவும் கர்ப்பத்தைக் காக்கும் தகவு அற்றதாகவும், பிரசவத்துக்கு ஏற்புடையதல்லதாகவும் காணப்படுகிறது.

இதனால் இவர்களுக்குப் பொதுவாக மருத்துவ கருவிகளைப் பயன்படுத்தியே பிரசவிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படுகிறது. இதனால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்புக்கள்ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.

அத்துடன், இவர்கள் பிரசவத்துக்கு ஒத்துழைக்கும் தன்மையும் மிகக்குறைவாகவேயுள்ளது. இவை மட்டுமல்லாது இவர்களின் மனநிலை - ஒத்துழைப்பின்றிய தன்மைகளினாலும், போசாக்குக் குறைபாடுகள் காணப்படுவதாலும், (வேண்டாத கர்ப்பம், கர்ப்பம் பற்றிய போதிய அறிவின்மை) இவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பிரசவிக்கத் தவறுகின்றார்கள். அத்துடன், கர்ப்பவதிகள் (கிளினிக்) பிணி ஆய்நிலையத்துக்குக் கிரமமாகச் செல்லாது விடுவதாலும், அங்கு வழங்கப்படும் போசாக்கு மாத்திரைகளை உட்கொள்ளாது விடுவதாலும், வைத்திய ஆலோசனையை செவிமடுக்கவும் தவறுவதால் இவர்களின் குழந்தைகளின் நலம் பாதிப்படைய சாத்தியக் கூறுகள் மேலும் அதிகமாக உள்ளன.

இந்தச் செயற்பாடுகளால் குறை பிரசவங்களுக்கும், காலம் தவறிய பிரசவங்களுக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன. தவிர இவர்கள் தாயாகும் போது மேலும் சில சிக்கல்கள் ஏற்பட சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. அதாவது குருதிசார் உபாதைகள் (P.P.ர்.Pஐர்) சிறுநீர்த்தொற்று, அமையம் தவறிய கருத்தங்கல் (நுஉவழிiஉ Pசநபயெnஉல), அதிபர வாந்தி (ர்லிநசநnளைளை பசயஎனையசரஅ) என்பனவாகும்.

அத்துடன், இவர்கள் கருப்பை புற்றுநோய்க்கு ஆளாகவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மற்றம் யௌவனப் பருவத்தில் கர்ப்பம் தரித்தல் ஏற்புடையதல்லாத ஒரு விடயம் என்றே கூறவேண்டியுள்ளது. இவை தவிர யௌவனப் பருவ கர்ப்பம் தரித்தல் - தவிர்க்கும் முறைகளாலும், குற்றவியல் கருச்சிதைவுகளாலும் (ஊசiஅiயெட யடிழசவழைn) - தாய் மரணம் போன்ற பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.

எமது சமுகத்தில் இந்நிலையை மேலும்வலுவாக்கும் நிகழ்வாகவே அலைபேசிகளின் காணெளி நெடும் தகவல்பரிமாற்றங்கள் அமைகி;றன…..

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator