Pages

Sunday, January 2, 2011

விழுந்து முறிந்ததா? முறிந்து விழுந்ததா?

வயோதிப் பெண்களை தாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். இந்யோயானது மாதவிடாய நிறுத்தத்தின் பின்னராக காலங்களில் Ostregen என்னும் ஓமோனின் அளவு பெண்களில் குறைவடைவதால் ஏற்படுகின்றது. இவ் ஓமோனானது என்புக் கலங்களின் வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்பை செய்கின்றது? என்புக கலங்களின் பெருக்கம் இவ் ஓமோனின் அளவு குறையும் போது குறைந்து போகின்றது. இதனால் முதிர்ச்சியடையும் என்புக் கலங்கள் இறந்து போக புதிய கலங்கள் அதை ஈடுகட்ட முடியாத நிலையில் என்பானது மெலிவடையும். என்பின் வன்மை குறைகின்றது.

இத்தோடு நின்றுவிடாது என்பின் வன்மையை பேணுவதற்கு இவர்களது உணவு கால்வாய்த் தொகுதியில் உள்ள உறுப்புக்களும் உதவி செய்யுமா என்ற ஒரு கேள்வி எழத்தான் செய்கின்றது.

இதைவிட இவ்வயதினரை பொறுத்தவரை உணவு ஒதுக்கங்களும் உடலின் ஒத:துக்கொள்ளாமையும் அதையும் தாண்டி இவர்களின் உடலியக்கமும் இவர்களை மேலும் இந்நோயினுள் நகர்த்துகின்றன.

இங்கு என்புக் கலத்தின் உருவாக்கத்தை எடுத்து நோக்கின்,
Ostrogen ஆஸ்திரோஜன், கல்சியம், விற்றமின் D என்பன முக்கியமாக தேவையானவை. இவையாவும் இச்செயற்பாட்ரைட எல்லைப்படுத்துகின்றன.

இவ்வயதினர் பால் நெய்த்தோலி மீன் போன்ற அஜீரணம் தடைபோடுகின்றதால் இவர்கள் பெரும்பாலுமத் இவற்றை ஒதுக்குவதை காண முடியும்.

இதைவிட இவ்வயதினர் உடலில் சூரிய ஒளி படுவது என்பது அரிது. இவர்களின் வாழ்க்கை முறை இவர்களை சூரிய ஒளியில் இருந்து விலகவே செய்கின்றது.

இவ்வாறான காரணிகள் எல்லாம் இவர்களின் என்பு வன்மையை எல்லை போட்டால் எப்படி இவர்கள் எலும்புகள் மெலியாமல் போகும். இதைவிட சில நோய்களாலும் கல்சியம் என்பை அடைதல் தடுக்கப்படும்.

இவ்வாறு இருப்பின் எப்படித்தான் உள்ளுற உக்கிப் போகின்றன. கறையான் அரித்த மரம் போல் பட்டென்று நொருங்கிப் போகின்றன.

இவ் உடைவுகள் பெரிதும் தொடை என்பில் ஏற்படுகின்றன. உடலின் பாரத்தைத் தாங்க முடியாத பரிதாபத்தில் இவை உடல் சிறிதொரு திருப்பத்துக்கு உள்ளாகும் போதும் இவ் என்புகளின் வடிவமைப்பு நீளத்தன்மை என்னும் இயல்புகளினால் இவை பெரிதும் உடைந்து போகின்றன.

இங்கே என்பு உடைந்து போவதால் விழுகின்றானர். எனினும் நம்மவர்கள் இதை நோக்கும் போது விழுந்து முறிந்து விட்டனர் என்று கருதுகின்றனர்.

இவர்களில் ஏற்படும் இவ் என்பு முறிவை சத்திர சிகிச்சைய+டு குணப்படுவத்துவதே ஏற்றதாகும்.

இதற்கான சத்திரசிகிச்சையின் போது செய்றகையான மூட்டுக்கள் பொருத்தப்படும். இத்னபோது குருதி இழப்பு மிகவும் குறைவு. மற்றும் சத்திரசிகிச்சையின் பின்னரான பராமரிப்பு காலமும் மிகக் குறைவு.

எனினும் இதற்கான சத்திரசிகிச்சை தராத சிகிச்சை முறையை எடுத்து நோக்கின் நோயாளி மாதக் கணக்கில் படுக்கையும் கையுமாகவே இருக்க வேண்டும். இதனால் உடல் என்புகள் மேலும் உக்கிப் போவதற்கும் குருதியானது சில இரத்;த நாளங்களில் உறைந்து உயிராபத்தை நோக்கி நகரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவற்றை எல்லாம் விஞ்சி படுக்கைப் புண் என்னும் ஒரு கொடுமையான நிகழ்வையும் சகிக்க வேண்டி அமையும்.

எல்லாவற்றையும் விட மாதவிலக்கு நின்று போன பெண்கள் தமது உணவில் கல்சியம் சேர்ந்த பால், நெய்த்தோல் போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் வருமுன் காப்போம் மற்றும் வயோதிபத்தை மதிப்பதும் அவர்கட்கான உதவிகளை செய்வதுடள் அவர்களுக்கான என்பு முறிவுக்கான வாய்ப்புக்களையும் குறைத்தல் நன்று.

இவற்றைவிட மாதவிடாய் நின்ற பெண்கள் Hormone replacement treatment என்னும் சிகிச்சையையும் மேற்கொண்டு வருகின்றமை வெளிநாடுகளில் காணக்கூடியதாக உள்ளது.

டாக்டர். வெ.நாகநாதன்

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator