Pages

Sunday, January 2, 2011

செவிப்பறைகளைத் துளையிடும் குச்சிகள்

செவிப்பறை மென்சவ்வானது காதுகளை சுத்தம் செய்யும் போது தவறுதலாக
கிழிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் கேட்டற் செற்பாடு பாதிப்புறுகின்றது என்று
மட்டுமல்ல கால ஓட்டத்தில் செவியுள் தொற்று ஏற்பட்டு மூளைக்காய்ச்சல் வரை
ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நமது சூழலில் காதுகளை சுத்தம் செய்வதற்கு hair pinஇ ளுயகநவல pin இவற்றை விட
தீக்குச்சிகள், நுயச டிரனள என்ற பலவிதமான பொருட்கள் மக்களிடையே
காணப்படுகின்றன. இவற்றினால் செவிப்பறைகள் கிழிக்கப்பட்டுவிடுவதே ஈற்று
விளைவாகின்றது.

செவியின் உடற் கூற்றிலை எடுத்து நோக்கின்………… மூன்று பகுதிகளாகக்
காணப்படுகின்றது. இது வெளிப்புறமாக காதுக்கால்வாய் செவிப்பறையுடன் முடிகின்றது….
நடுச்செவி என்பது செவிப்பறை மென்சவ்வை ஆதரமாக கொண்டு என்புக்கட்டமைப்புகளை
கொண்டுள்ளது இதன் தொடர்ந்து உட்செவி நரம்புசார் கட்டமைப்புகளை கொண்டு
காணப்படுகின்றது. செவிப்பறை என்பது… மிருதங்கம், மேளம் இவற்றில் தோற்பகுதி
எவ்வாறு அதிர்வுறுவதன் மூலம் சத்தம் எழுப்பப்படுகின்றதே அதுபோல செவிப்பறையும்
அதிர்வுறுகின்றது. மேளம் மிருதங்கம் என்பன மிகப்பெரும் அதிர்வுகளுக்கு ஏற்ப
அதிர்கின்றன ஆனால் செவிப்பறையானது மிகச்சிறிய அதிர்வுகளுக்கு ஏற்ப
அதிர்கின்றது. உணர்திறன் மிக்கது. இங்கு ஏற்படும் அதிர்வுகளை மிகைப்படுத்தி
கடத்துவதை செய்வனவாகி என்புப்பகுதிகள் காணப்படுகின்றன இவ்வென்புகள் ஏந்தியுரு,
பட்டையுரு என்புகள் என அழைக்கப்படும். இவை அதிர்வுகளை நரம்புப் பகுதிக்கு
கடத்துகின்றன. இவ்வாறு ஒரு நுணுக்கமான தொழிலை மிகவும் சிறப்பாக செய்யும்
செவியின் செவிப்பறையானது மிக மெல்லிய ரிசுப் போன்றது. இன்னும் எளிமையாகக்
கூறினால் உணவுகளை பொதி செய்ய பயன்படும் டரnஉh ளாநநவ போன்றது. இதனால் இதன்
உணர்திறன் மிகக்கூடவாக உள்ளது.

அதேவேளை இது மென்மையானதாக இருப்பதால் குச்சிகள், ஊசிவகைகள், கிளிப்வகைகள்,
இயர்பட் இவற்றினால் இலகுவில் துளையிடப்படுகின்றது. காதுகளை சுத்தம் செய்யும்
நோக்கில் இவற்றைப் பயன்படுத்தும் போது சற்று விசை அதிகமாகக்
கொடுக்கப்பட்டால் கூட இவை கிழிவுறுகின்றன.

இவை கிழிவுறுவதால் காதில் இருந்து நீர் வெளியேறும் இது சீழ் தன்மையானதாக
தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து வெளியேறும். இவ்வாறான நிலையில்
தொடர்ந்து நகருமாயின் மூளை வரை கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டு.

காதுகளை சுத்தம் செய்வது பற்றி சிறிது பார்ப்பின் இதற்கு சிறப்பான கருவி
காணப்படுகின்றது. இதில் பூதக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இப்பூதக் கண்ணாடியுரு
மருத்துவம் காதுக்கால்வாய் ஊடாக அவதானித்த வண்ணம் மிகவும் அவதானமாக
நிதானமாகவே காது சுத்தம் செய்யும் செயலை மேற்கொள்வார். சற்று நிதானக்குறைவு
ஏற்பட்டால் கூட செவிப்பறை மென்சவ்வு கிழிவுறும் என்பதால் இந்நிலை ஏற்படாது
தவிர்க்க அக்கருவியில் உள்ள பூதக்கண்ணாடியின் உதவியுடனேயே
மேற்கொள்ளப்படுகிறது.

இது இவ்வாறிருக்க நாம் சாதாரணமாக காதுகளை சுத்தம் செய்வதை எடுத்து நோக்கின்
எமக்கு செவிப்பறை காதில் எங்கு இருக்கிறது என்று தெரியாது எமது கண்ணால் எமது காதை
அவதானிக்க முடியாது. இதைவிட செவிப்பறை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதும்
தெரியாது. ஏதோ ஒரு குத்து மதிப்பில் காதினுள் குச்சிகள்.. ஊசிகள் இவ்வாறு பட்ட
பொருட்களை செலுத்தி காதில் செவிப்பறையை குத்தி துளையிடுவதையே செய்கின்றாக
உள்ளது.

சாதாரண மக்கள் குச்சிகள், கிளிப் வகைகளை பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்யும்
நோக்கில் செவிப்பறையை துளையிடுகின்றனர்.

எனினும் நாகரிகம் மிக்கவர்கள் கடைகளில் விற்கும் இயர் பட்களை பயன்படுத்தி
காதுகளில் செவிப்பறைகளை துளையிடுகின்றனர். இயர் பட் பாவனை தற்போது மிகவும்
நாகரிகம் மிக்க செயற்பாடு என்றே கருதுகின்றன. இயர் பட்களை பயன்படுத்தி
காதுகளில் செவிப்பறைகளை துளையிட்டுக் கொண்டதுடன் நின்றுவிடாது அதை உணராமல்
“இயபட்” என்ற ஆங்கிலச் சொல்லை ஆங்கிலேயப்பாணியில் மிகவும் மெருகேற்றப்பட்ட
உச்சரிப்புகளுடன் சொல்லிக் கொள்வதே நகைப்புக் குரியவிடயம் என்றால்
மிகையாகாது.

இந்த இயர் பட்கள் காதில் உருவாகும் மெழுகளை (அதாவது குடும்பி என்றும் அழைப்பர்)
சுத்தம் செய்யுமா என்றால் தெளிவாக விடை எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்
இவற்றின் நுணியில் காணப்படும் பஞ்சில் மெழுகின் மீது காணப்படும் ஈரப்பற்று
மட்டுமே ஒட்டிக் கொள்ளும் மீதி ஒட்டிக்கொள்வது மிக அரிது. அத்துடன் இவற்றை
பயன்படுத்தும் போது மெழுகு செவிப்பறை நோக்கி உள்நோக்கி தள்ளப்படுகின்றது.
இதனால் மெழுத்திண்மம் ஏற்பட் காதுவலி ஏற்படும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இவை எல்லாம் தாண்டி செவிப்பறைகள் கிழிவடைவதால் ஏற்படும் தொற்று நாட்பட்டதாக
மாறுவதற்கும் - மூளையிலும் தொற்று உருவாகவும் வாய்ப்புக்கள் உண்டு. இவற்றை விட
காதின் அயற் பகுதிகளில் காணப்படும் என்புகளில் உள்ள காற்று இடைவெளிகள் கீழ்
தங்கி அசௌகரியங்களையும் உண்டுபண்ணும். இவற்றோடு நின்றுவிடாது காதுகள் கேட்காது
போவதும் வழமையே. இவ்வாறு பட்ட துர் விளைவுகளையே இந்த இயர்பட் தொடக்கம்
குச்சிகள், கிளிப் வரை செய்கின்றன.

இதைவிட நாகரிகம் மிக்கவர்கள் தமது காதுகளுக்கு ஏற்படும் தீமையை அறிந்தும்
அறியாமல் செவிப்பறைகளை துளையிட்டுவிட்டு அதற்கான மருத்துவத்தை தேடி அலைவதை
கணிப்பிடும் போது இது தேவைதான என்பது ஓர் எண்ணம் உருவாகும்

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator