Pages

Sunday, January 2, 2011

வலி நிவாரணிகளில் வலுவிழக்கும் சிறுநீரகங்கள்

வலி நிவாரணிகளின் பாவனை தற்போது மிகவும் அதிகரித்துச் செல்லுகின்ற ஒரு போக்கு காணப்படுகின்றது. மேலும் வலி நிவாரணங்களின்றி வாழ முடியாத நிலையில் வலுவாகவே அடிமைகளாகிவிட்ட ஒரு பரிதாப நிலையும் நம் மக்களிடையே காணமுடிகின்றது. எனினும்இவ்வலி நிவாரணிகள் எல்லாம் என்ன? நல்லவை தான என சிந்திக்க வேண்டிய தேவை எற்படுகின்றது. வலி நிவாரணிகளை தேவையின்றியும் தேவைக்கு அதிகமாகவும் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி எம் மக்கள் அறிந்தும் அறியாதவையாகவே உள்ளன.

சிறுநீரகங்கள் என்றால் அவைதான் உடலில் காணப்படுகின்ற சுத்திகரிக்கும் தொழிற்சாலைகள் என்றே நினைவு கொள்ள வேண்டும். குருதியின் சுத்திகரிப்பு செய்யும் செயலையே இவை செய்கின்றன. மிகவும் எளிமையாகக் கூறுவதனால் உடல்கலங்கள் ஒவ்வொன்றும் தமக்குத் தேவையான பதார்த்தங்களை பயன்படுத்தி வெளிவிடும் கழிவுப்பதார்த்தங்களை குருதியினுள் வெளிவிடுகின்றன. இதனால் குருதியில் கழிவுப்பதார்த்தங்கள் அதிகரிக்கும் இக்கழிவுப் பதார்த்தங்கள் உயர் செறிவடையின் சில உடல் அங்கங்களின் செயற்பாடுகள் பாதிப்புறும் இந்நிலையை வராது தடுக்கவே சிறுநீரகங்கள் இக்கழிவுப் இரசாயனப் பதார்த்தங்கள் குருதியில் இருந்து வடித்து அகற்றுகின்றன.

மேற்படி செயலை செய்கின்ற சிறுநீரகங்களின் தொழிற்பாட்டில் ஏற்படும் இடர்பாட்டினால் வலிநிவாரணிகளின் வலிந்த பாவணை ஏற்படுத்துகின்றது.

நெடுங்கால தலைவலி முதுகுவலி மாத்திரைகள் மற்றும் வலிமாத்திரைகள் மாதவிடாய் தலைவலி நிவாரணிகள் போன்றனவே சிறுநீரகத் தொற்று, சிறுநீரகக் கற்கள், இதயம் வலுவிழந்த நிலை மற்றும் உடலில் இருந்தால் மிகையாகாது நிரழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் மேலும் வலுவுடன் சிறுநீரகங்களை தாக்குகின்றன.

இதனால் ஆரம்ப நிலையில் அறிகுறிகள் புலப்படாது போகலாம். மேலும் சிறுநுPரளவு அதிகரித்தல் சிறுநீரில் கிருமிகாணப்படல் போன்றனவும் நாரிநோ,மற்றும் சிறுநீர் சிவப்பு சார்ந்த நிறமாகக் கழிக்கப்படலாம்.

இவ்வாறான நிலையை நோயாளி எய்தும் போது வயிற்றுப்புண் அறிகுறிகளும்; வலிநிவாரணிகளின் செயற்பாட்டால் காணப்படலாம். இவற்றைவிட உயர்குருதியமுக்கம் குருதிச்சோகை, சிறுநீருடன் புரதம் கழிதல் போன்ற நிகழ்வுகளும் எற்;படலாம்.

மேற்படி; வலிநிவாரணிகளின் மிகைப்பயன்பாட்டால் தூண்டப்படும் சிறுநீரகத் செயற்திறன் குறைதல் யுயெடபநiஉ Nநிhசழியவால என்பர்.

இந்நோய் ஆரம்பநிலையில் இனம் காணப்படின் வலிநிவாரணிகள் பயன்பாட்டை நிறத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீளமுடியும

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator