Pages

Sunday, January 2, 2011

“பம்”மும் அடிச்சுக் கொண்டு “தம்”மும் அடிக்கலாமா?

எங்களில் பலருக்கு ஆஸ்துமா நோய் பற்றி அனுபவம் இருக்கும் சொல்லப்போனால் ஆஸ்துமா நோயறியாத வீடு அகிலத்தில் இருந்தால் அது பெரிய ஆச்சரியம் என்றுதான் இருக்கும் ஆஸ்துமா நோயை…. பலர் பலவிதமாக அழைப்பர்…. அதாவது முட்டு, தொய்வு, இழுப்பு எப்படி அழப்பினும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதுபோல சுவாசக்காற்றுக் குழாய்களில் ஏற்படும் மீளக்கூடிய சுருக்கம்…. இது பரம்பரைக்காரணிகள் மற்றும் சுழற்காரணிகளால் எல்லைப்படுத்தப்படுகின்றது.

இங்கு சுவாசக்குழாயில் ஏற்படும் சுருக்கம் எவ்வாறு நிகழ்கின்றதெனில் சுவாசக்குழாயின் சுவரில் வீக்கம் ஏற்படும் போது சுவாசக்குழாயின் உள்விட்டம் குறைவடையும் அதுவே சுருக்கம் என்று கருதப்படுகின்றது…. இவ்வாறான விடயம் பற்றி சற்று சிந்தனையை திருப்பினால் ஜயோ மூச்சுக்குழாய்கள் உள் விட்டம் குறைகின்றனவா. சுருக்கின்றனவா அப்படியானால் காற்று நுழையுமா இல்லை மூச்சுக்கு என்ன கதி இப்படி எண்ணம் தன்னாலே மனக்கண் முன் தோன்றாமலாவிடும். அப்படி என்றால் மூச்சு நின்றால்…. மரணமா… இப்படி எல்லாம் சிந்தை தன்னைத் தானே கூர் பார்த்த வண்ணம் தான் இருக்கும். இப்படியான ஒரு நிலையில் உண்மையிலேயே அவசர சிகிச்சைக்குரிய தேவை விரைவில் மணித்துளிகளில் அல்ல வினாடித்துளிகளிலே ஏற்பட்டுவிடும் என்று கூறினால் அது மிகையான ஒரு விடயமாக கருத முடியாது. இது எப்படி என்று பார்த்தால் ஒவ்வாமை… அதாவது அலேர்ஜி இன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒத்துக்கொள்ளாத தன்மை என்றே வைத்துக் கொள்வோம்…. தூசு துணிக்கைகள் காற்றில் வரும் மகரந்தமணி, புழுதி இப்படி பல பொருட்கள் ஒவ்வாமைக்குரிய செயற்பாட்டை செய்கின்றன….. இதன் போது ஏற்படும் ஒவ்வாமைத்தன்மை சுவாசக்குழாய்களில் ஏற்படின் சுவாசச் செயற்பாடுகள் பாதிப்புறும் என்பது சொல்லாமலே புரிய வேண்டும்.

இது இவ்வாறு இருப்பினும் இந்நோயானது இலகுவில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஒரு நோய் என்பது. மிக முக்கியமான ஒருவிடயம் ஆனாலும் சிகிச்சை ஏன் பலனளிக்கவில்லை என்ற கேள்வி உண்டு… அதிலும் உண்மை உண்டு. அதற்கு பல காரணங்கள் அமையலாம். இவற்றில் தூண்டற் காரணங்களைத் தவிர்தல் மற்றும் கிரமமான மருந்துப்பாவனை இன்மை என்பன முக்கியமானவை புகைத்தல் ஒரு தூண்டற்காரணியாக அமைவதுடன் மேலும் மேலும் சுவாசப்பையை நலிவுறச் செய்கின்றது.

ஆஸ்துமா நோயிற்கான சிகிச்சை முறையை எடுத்து நோக்குகின்ற போது…. நோயிலிருந்து விடுவிப்பவை சுநடநைஎநசள என்று அதாவது நோய்வரும் பாவிக்கும் மருந்துகள் (ஏநவெழடin) இவை என்ன செய்கின்றன என்றால் சுவாசக்குழாயின் சுருக்கத்திற்கு எதிரிடையாகவே செய்ற்படுகின்றன. இவை சுவாசக்குழாய்களை விரிக்கின்ற செயற்பாட்டை செய்கின்றன அதாவது சுவாசக்குழாயில் காணப்படும் தசையின் மீது தமது தொழிற்பாட்டை நிகழ்த்துகின்றன. இதனால் சுவாசக்குழாய்கள் விரிவடைகின்றன காற்று உள் நுழைகின்றது… நோய்நிலை தன் கோரப்பிடியை சற்று தளர்த்துகின்றது. எனினும் இவை அவ்வப்போது ஏற்படும் தீவிரத்தன்மையை குறைக்கவே பயன்படும் ஆனால்… இவற்றினால் இவ்வாறு நோய் நிலையின் போது சுவாசப்பைகளில் சுவாசச்சுவட்டில் ஏற்பட்ட அழற்சியால் ஏற்பட்ட நொய்தல் நிலையை பெரிதளவில் மாற்ற முடியாது.

அந்த வேலையை செய்பவை Pசநஎநவெநசள என்று அழைக்கப்படும் இவை பெரும்பாலும் ளுவநசழனை வகைக்குரியவையாகும். இவ்வகை மருந்துகளும் உறிஞ்சி வாங்கிகளில் அதாவது பம்களில் காணப்படும். இவற்றினை போலவே சுநடநைஎநசள உம் பம்களில் காணப்படும். சுநடநைஎநசள நோயின் தீவிர நிலை ஏற்படும்போது பயன்படுத்தினும் Pசநஎநவெநசள் வகை பம்கள் காலையும் மாலையும் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டியவை ஏனெனில் சுவாசப்பாதையில் ஆஸ்துமா நோயின் போது ஏற்படும் அழற்சியால் ஏற்படும் நொய்தல் தன்மை அதாவது காயங்களை ஆற்றும் சக்தி கொண்டவை.

இவ்வகை பம் பாவிப்பதன் மூலம் காயங்கள் ஆறுகின்றன ஆனால் தம் என்று கூறும் புகைத்தலால் காயங்கள் ஆகின்றன எனவே மருந்தையும், நோயாக்கியையும் சேர்த்தே பயன்படுத்தும் போது மருந்து எதற்காக பாவிக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.

பொதுவாக எமது சமூகத்தில் அனேகம் பேர்… சுவாக நோயுடன் கூட வாழ்கின்றனர் அதாவது 45 வயதை தாண்டியவர்களில் அனேகர் தமது சுவாசப்பையை புகையில் பதனிட்டவர்களாகவே காணப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் மூச்சுவிட முடியாத நிலையில்… சுவாசிப்பதே சுமை என்ற நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர் ஆனாலும்… குணமாகிவிட்டால் மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறிக்கொண்டது என்பது போல உதடுகளில் சிகரட் ஏறிக் கொள்கிறது…

இங்கு என்னதான் கூறியும் பலன் இல்லை தம் அடிப்பதை நிறுத்திவிட்டால்… பம் அடிப்பதில் பலன் இருக்கும் இல்லையென்றால் பம் அடிப்பதில் பலன் இல்லாத நிலையில் சுவாசநோய் மேலும் தன் ஆக்கிரோசமான முகத்தையே வெளிக்காட்டும். அது அவ்வாறே இதயத்தையும் பலவீனமாக்கும் செயற்பாட்டையும் மேற்கொள்ளும் இவ்வாறே கூட்டுவிளைவுகள் எல்லாம்… ஒNரு திசையில் நகர்ந்துவிடும்…. அதன்பின் மீட்சி இருக்கா? என்பது தான் கேள்விக்குறி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator