Pages

Sunday, January 2, 2011

இளவயதிதினருக்கும் இடுப்பு வலியின் இம்சைகளா?

இளவயதினர் என்றால் அதுவும் துள்ளுகிற இளமைப்பருவம் அந்தத் துள்ளித்திரயும் வயதினில் இடுப்புவலி எனின் இதென்ன கதை என்று கேட்கிற நடைமுறையில் இப்படி ஓர் இம்சை இருக்கிறது என்றால் அதுவும் வியப்புத்தான். ஆனால் வலியின் கோரத்தை கருதும் போது இப்படியும் ஒரு கொடுமையா? என்று எண்ணம் தோன்றாமல்விடாது தோன்றியே தீரும் இப்படிப்பட்ட ஒரு நிலை இங்கே கருதப்படுகிறது.
இடுப்புவலி, நாரிநோ, நாரிப்பிடிப்பு இப்படி வலிக்கு பெயரிடப்பட்டு கொண்டு இருப்பினும் இடுப்புவலி பெருமளவில் குறித்த வயதினரை மட்டுமே குறிவைக்கும் என்றே எண்ணம் தோன்றும் அதெல்லாம் அந்தந்த வயதுக்காரர்கள் சமாச்சாரம் இப்படித்தான் கருதும் நிலை இருக்கிறது எனினும் இளம்வயதினரை அதாவது வாலிப வயதினரை இலக்கு வைக்கும் இடுப்புவலி காணப்படுகின்றது. இது இடுப்பின் இருபுறமும் சற்று தாழ்வாக ஏற்படுகிறது. இதன் பிடிப்புத் தன்மை அல்லது இறுக்கமான நிலை பகலில் மோசமாகவும் பின் உடல் அசைவுடன் குறைவடைகின்றது. இந்த நோய் நிலை யுமெலடழளiபெ ளுpழனெலடவைளை எனப்படும் இதன் ஆரம்பநிலையில் இனம் காணுதல் என்பது தவறப்படும் ஒரு விடயமாக அமையலாம் ஏனெனில் இது பெரும்பாலும் அமைதியான போக்கை கடைப்பிடிக்கின்றது. இந்நோய் நிலையில் முதுகு கூனலுறும் இதனை தொடர்ந்து முள்ளந்தண்டின் அருகில் காணப்படும் தசைகள் நலிவுறுகின்றன.
இதன் போது ஏற்படும் உபாதை முள்ளந்தண்டு மற்றும் இடுப்பென்பில் ஏற்படும் அழற்சி என்றே கூற முடியும். இதன் ஆக்கிரமிப்பு பெண்களை விட ஆண்களில் அதிகமாக காணப்படுகின்றது.இந்நோயின் நோயியல் பற்றி கருதும் போது. நிணநீர்க்குழியங்கள் மற்றும் பிளாஸ்மா செல்களின் ஊடுருவலுடன் என்பில் அரிப்பு ஏற்படுவதாலும் இதன்போது ஏற்பட்ட என்பு பாதிப்பு நோயின் நோயியலாகின்றது. இன்னும் சூழற் காரணிகளின் செல்வாக்கு பற்றியும், சிலவகை நுண்ணங்கிகளின் தாக்கத்தினால் ஏற்படும் மூட்டு நோயியலுடன் சான்று பகர முடியாத நிலை காணப்படுகின்றது
இந்நோயானது சில இயல்புகள் கொண்டு வரையறுக்கப்படுகின்றது. அதாவது காலையில் காணப்படும் இறுக்கமான நிலை ஆழசniபெ ளவகைகநௌள 30 நிமிடங்களை விட கூடியதாக இருத்தல், முதுகு நோவானது ஓய்வு நிலையில் அல்லாது உடலியக்கத்துடன் குறைவடைதல் பாதியிரவில் தூக்கம் கலைந்த நிலை அதாவது நோவின் கொடூரத்தால் இதைவிட மாறுபட்ட முதுகு நோ இங்கு முள்ளந்தண்டின் இறுக்க நிலை ளுஉhழநடிநச வநளவ மூலம் மதிப்பிடப்படுகின்றது. இவ்வாறே நோயின் தாக்கம் பெரிதும் பெரிய மூட்டுக்களிலேயே உருவாகின்றது. இடுப்பென்பில் தொடை என்பின் மூட்டில் ஏற்படும் போது கால் நிலையான முன்னோக்கிய மடிக்கப்பட்ட நிலையை எய்துகின்றது. இவை இவ்வாறே அமைய இந்நோயினுடன் கூடவே கண் வலி, ஒளி வெறுப்பு நிலை, பார்வை குழப்பம் போன்ற இதர அறிகுறிகளும் கூட்டு சேரலாம்.
எமது உடலில் காணப்படும் நிணநீர்த் தொகுதியின் ர்டுயு ர்ரஅயn டநரமழஉலவந யுவெபைநளெ உடன் இதன் தீவிரத் தன்மையும் மாறுபடுகின்றது. உதாரணமாக ஆபிரிக்கா மற்றும் யப்பானில் குறைந்தளவிலும் வெள்ளை இனத்தில் அதிக தாக்கத்தையும் காட்டுகின்றது. இந்நோய் நிலையானது சில எளிய குருதி மாதிரிச் சோதிப்புகளாலும் குருதிக்குழிய படிவு விதத்தைநுளுசு அறிதல் மற்றும் ஊசுP போன்ற எளிய குருதி மாதிரி சோதனைகள் மற்றும் ஓசயல மூலம் அதாவது முதுகெலும்பு மூங்கில் மாதிரி உருவை பெறுவதே இங்கு கருதப்படுகின்றது. இவற்றைவிட ர்டுயு வநளவiபெ இ ஆசுஐ ளுஉயn மூலமும் இனம் காணலாம். மேலும் வலி நிவாரணிகள் Nளுயுஐனுளு மற்றும் ளுவநசழுனை iதெநஉவழைn இன்னும் மோசமானதாகவும் சுற்றியல் பரவல் உடையதாக அமையின் ஆநவாழவசநஒயவந மற்றும் யுவெi வுNகு என்பனவும் பயன்படும்.
எது எவ்வாறு இருப்பினும் நோய் கொடூரமான வலியை உணரவைப்பினும் பூரண குணமாதலை 80மூ கொண்டவை என்பது கேட்கும் போது மகிழ்வூட்டும் விடயமாகவெ உள்ளது. ஏனெனில் இந்நோயானது இருபது வயதுகளில் ஆரம்பிப்பினும் அமைதியாக காணப்பட்டு வலியுடன் எல்லைப்படுத்தப்பட்டு காணப்படினும் பிற்காலத்தில் மோசமான முதுகெலும்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் இளவயதில் இனம் காணப்படின் ஆரேக்கியமான தொரு விடயமாக அமையும் என்றால் வியப்பில்லை.

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator