Pages

Sunday, January 2, 2011

மழலைகளின் உணவின் போசனையும் சிறுவர் முதுகில் கல்வியும்

கனவுகளை சுமப்பவர்கள் யார் என்றால் கனவுகளை சுமக்கும் வாலிபருவமல்லா பெற்றோர் என்று தான் கூறவேண்டும் தமது பிள்ளை வளர வளர இவர்கள் கனவுகளும் வளர்கின்றது . எமது சமுகத்தில் கல்வி தொடர்பில் பெற்றோரின் அக்கறை மிகவும் கனதியானது என்றே கூறவேணடும் இதில் தவறில்லை எனினும் இவர்களின் போசனை குறித்த வயது பருவத்தில் நன்றாக அமையாது தவறுகின்ற நிலை எமது மக்கள் மத்தியில் தாரளமாகவே உள்ளது என்றே கூறவேணடும் எனினும் குறித்த வயதில் இச்சிறுவர் மீது முதுகில் கல்ஜ வி ஸ சுமையாக ஏற்றப்படுகின்றது
குறித்த வயது காலத்தில் பெற்றேரினால் மேற்கொள்ளப்படும் உணவொதுக்கம் மிகப்பெரியதொரு தமது இலட்சியத்தில் இப்படியொரு பாதிப்பை; உண்டுபண்ணுமென்பதை இவர்கள் அறிந்தும் அறியாதே உள்ளது
அதாவது குழந்தை பிறந்து 6 மாதகாலத்தில் அதன் ஈரலில் சேமிக்கப்பட்ட சேமிப்புணவுகள் முடிவடைகின்றன இது ஒருபுறமிருக்க இவர்களின் குருதியி;ன் சிவப்புநிறமணிகள் அதாவது செங்குருதிச்சிறுதுணிக்கைகள் குழந்தைப்பருவத்திற்குரியதிலிருந்து வயதுவந்தர்கடகான யனரடவ குருதி அமைப்பை பெறும்போது அமைப்பழிவதால் தற்காலிக குருதிச்சோகை ஏற்படுகின்றது. .இவ்வேளையில் ஏற்றகவனிப்பு கிடைக்கத்தவறும் போது குருதிச்சோகை நிரந்தரமாகின்றது இதைவிட இக்காலப்பகுதியில் மேலதிக உணவு ஊட்டல் வேண்டப்படுகின்றது இதன்போது மீன்போன்ற உணவுகள் ஒதுக்கப்படுகின்றன என்றால் அதுமிகைப்படுத்தல் அல்ல நியம் என்றே அமையும் இவை வயிற்றை குழப்பிவிடுகின்றன என்ற எண்ணம் உணவூட்டலை திறனற்றதாக்குகின்றது எனினும் இக்காலத்தில் குழந்தைகளின் நுண் பற்றுதல் அதாவது நுண்ணிய பொருட்களினை விரல்களினால் பொறுக்கி எடுக்கும் திறன் விருத்தியடைகின்றது இதனால் அழுக்குபொருட்கள் இவர்களின் வாயில் நுழைகின்றது இதனால் ஏறபடும் உபாதைகள் தவறாக உணவொதுக்கத்தை நோக்கி நகர்கின்றது இதைவிட குருதிக்கனவளவு போசனைத்தேவை இவையும் அதிகரிக்கினறன
இக்காலவேளையில் இரும்புச்சத்து உணவின் தேவை முதன்மை பெறுகின்றது இங்கு இலகுவில் இச்சத்தை வழங்கக் கூடிய மீன் உணவுகள் பெரிதும் ஒதுக்கப்படுவதே வழமையாகிவிட்டன இதைவிட மீன் உணவு சிறுவரின் முளை விருத்திக்குதேவையான கொழுப்பமிலங்களை கொண்டிருப்பதும் ஏலவே அறியப்பட்டவை என்றுதான் அமையும்
இவற்றைவிட பச்சை இலை வகைகள் உணவெதுக்கத்தில் காட்டும் பங்களிப்பு விஞ்சி ஒருவிடயம் தான் என்றால் மிகையல்ல இதுஒருபுநமிருக்க பச்சை இலைவகைகள் சமயல் செய்யும் போது அவற்றுக்கான தேசிப்புளி சூடான நிலையில் விடப்படின் பயனற்றதாகிவிடும் இரும்புச்சத்தானது புளியில் உள்ள விற்றமின்னுடன் சேரும் போதே அகத்துறிஞ்ச ஏற்றநலையை; அடைகின்றது என்றால் அது மெருகேற்றப்படத உண்மை என்றே கூறவேண்;டும்
மேலும் இவர்களில் உணவுபழக்கம் உணவுஉண்ணும் முறை இவையும் சேர்ந்தே நகர்கின்றது போசக்கின்மை சிறுவர்கள் குருதிpச்சேகைக்கு ஆளாகின்ற ஈர்வை போரின் பின் வலுவடைகின்றது போரின் கொடிய விளைவால் வறுமைநிலையில் சிறுவர்தொழிலாளர் எண்ணிக்கை மனதை நெருடத் தொடங்கிவிட்டது
இவை கவனிக்கமறந்தநிலையில் தொடரின் எமது மண்ணிலும் உலகத்தின் வறுமைக்காட்சிகளை காணமுடியும் இதுவறுமையை மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சியையும் விமர்சிக்கின்ற விடயமென்றே புலப்படும் போரின் வறுமை ஒருபுறம் இருக்க உணவொதுக்கம் இன்னொரு புறம் இதை எல்லாம் தாண்டி ஆங்கில விளம்பரங்களால் அங்கப்பெருக்கமடையும் சிறுவர் இப்படி முளைத்திறன் குன்றிப்போன சமுகமா நாளை வரப்போகிறது

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்

More than a Blog Aggregator